சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமாகாளி அம்மன் கல்வி அறக்கட்டளை, சென்னை, பக். 576, விலை 400ரூ. காந்தியம் பைத்தியக்காரரின் திட்டம் தமிழகத்தில் காந்தியத்தின் அருமை பெருமைகளையும், சர்வோதய கருத்துக்களையும் பரப்பியவர், இந்நூலாசிரியர் அமரர் வீ. செல்வராஜ். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இயக்கத்தின் தியாகியாகவும், உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, தமிழ்நாடு சர்வோதய சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், பல்வேறு வார, மாதஇதழ்களின் ஆசிரியராகவும் விளங்கிய நூலாசிரியர், எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வம் எனும் பாரதியின் வாக்கைக் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி, பக். 392, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் சுயசரிதை நூல் இது. தமிழக நடிகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களால் எழுதப்பட்டவை அல்லது மற்றவர்கள் எழுதியவை. எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதை மட்டும்தான், அவராலேயே எழுதப்பட்டு வெளியாகி உள்ளது. தமிழக திரையுலகை ஆட்சி செய்தவர்களில் பெரும்பான்மையோர், தென் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சேடப்பட்டியை சேர்ந்த ராஜந்திரன் முதன்மையானவர். கடந்த கால மற்றும் நிகழ்கால தமிழகத்தின் பிரபலங்களின் வாழ்வின் […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 140, விலை 120ரூ. இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர், தமிழ் இலக்கியப் படைப்புப் பணிகளிலும், இலக்கிய வட்டப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே உருது, கொங்கணி, பஞ்சாபி, ஆங்கிலம், ஒரியா, ஜாவா, அஸ்ஸாமி, மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் பலர், வாழ்க்கை தரும் நெருக்கடிகளுக்கும், உறவுகள் தரும் ஏமாற்றங்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களின் கதைகளே இந்நூலில் […]

Read more

உயில் மற்றும் பிற கதைகள்

உயில் மற்றும் பிற கதைகள், ஓரியா, மூலம் ஜெ.பி. தாஸ், தமிழில் சுப்பிரபாரதிமணியன், சாகித்திய அகாதெமி வெளியீடு, பக். 256, விலை 160ரூ. கணவன் இருக்கும்போது சுகமில்லாமலும், சொற்ப வருடங்களில் கணவனை இழந்தும், புகுந்த வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவளின் வெற்றியை உயில் கதை சொல்கிறது. பொதுவாக நூலாசிரியர் என்பவர் ஒரு நாளைக்கு 50 பக்கங்கள் எழுத முடியும். நாடகாசிரியர் நாள் முழுவதும் சக நடிகர்களடன் ஒத்திகை செய்ய முடியும். ஆனால் கவிஞர் ஒரு நாள் முழுவதும் […]

Read more

பாடங்கள் படிப்பினைகள்

பாடங்கள் படிப்பினைகள், டாக்டர் எஸ். ஜீவராஜன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 19, விலை 90ரூ. இந்த நூலின் நூலாசிரியர் டாக்டர் எஸ். ஜீவராஜன் பாலியல் நிபுணர். மருத்துவம் தொடர்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின் இந்தப் புத்தகம் அவரது வழக்கமான படைப்புகளில் இருந்து சிறிது வித்தியாசப்பட்டுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த, படித்த சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்துள்ளார். சளித் தொல்லையில் மூச்சுத் திணறி அழுதபடியே இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடுக்கை அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தனர் அதன் […]

Read more

கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ. புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் […]

Read more

மேடை நமதே

மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ. சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.   —- போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ. மத சார்பின்மை பற்றி புதிய […]

Read more
1 6 7 8