அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-229-9.html வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்தும் தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன். வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு. இது சரி-தவறு என்பது குறித்த தெளிவான நிலைபாடு, சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான […]

Read more

நோய்களிலிருந்து விடுதலை

நோய்களிலிருந்து விடுதலை, அ.உமர் ஃபாரூக், எதிர் வெளியீடு, பொள்ளச்சி, விலை 60ரூ. ஒரு சிறிய நூல்கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல். 86 பக்கங்களில் நமது உடல் குறித்த அடிப்படை புரிதலையும் உடலின் இயக்கம் பற்றிய ஞானத்தையும் வழங்குகிறார் ஹீலர் அ. உமர் ஃபாரூக். அக்கு பஞ்சர் சிகிச்சை முறை முன்னோடிகளில் ஒருவரும் தெளிந்த நீரோடை போல அது குறித்து எழுதி வருபவருமான இவர் தனது ஞானத்தின் ஒரு பகுதியை இந்த நூல் மூலம் நமக்குத் தருகிறார். […]

Read more

அடைமழை

அடைமழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகிவிட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறிவிட்டார்கள் என்று நினைத்த தருணத்தில் காட்சி தருகிறார்கள் ராமலக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள். மிக சுவாரஸியமான நடையில், சிறந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார் ராமலக்ஷ்மி. வாழ்வின் அபத்தங்கள் முரண்பாடுகள், உறவுச் சிக்கல்களை மிக நயமாக தனது கதையில் எடுத்துக்காட்டிச் செல்கிறார் ராமலக்ஷ்மி. ஒவ்வொரு கதையிலும் முதல் வரியிலேயே கதை ஜிவ்வென பயணிக்கத் துவங்குகிறது. அதனால் முதல் […]

Read more

கடலோரக் கவிச்சோலை

கடலோரக் கவிச்சோலை, அருள்திரு. ஸ்டீபன் கோமஸ், சமூக சமய ஆய்வுக் கழகம், வலம்புரி நாதம் வெளியீடு, வீரபாண்டியன்பட்டினம், விலை 500ரூ. மீனவர்கள், பரதவர்கள் என சமகாலத்தில் அழைக்கப்படும் மக்கள் வரலாற்று நூல்களாலும் பொது சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் வரலாற்றில் இழந்த இடத்தை மீட்கும் சொற்பமான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த நூல். 17ஆம் நூற்றாண்டு முதல் பரதவ சமூகத்தினர் பங்களித்த சந்தப் பாட்டுகள், கவிதைகள், கட்டுரைகளை இரண்டு பாகங்களாக 2000 பக்கங்களுடைய நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். தங்களின் வரலாற்றுப் பெருமை, நம்பிக்கைகள், தொழில், சமூகம் குறித்த சித்திரத்தைக் […]

Read more

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், ந. முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 160ரூ. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந.முத்துமோகனின் 9 தலைப்புகளில் வெளியான நேர்காணல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி,8/10/2014.   —-   ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச், (மாற்றத்திற்கான ஒரு சாதனம்), ஏ.பி.ஜெ. அப்துல்காலாம், வி. பொன்ராஜ், ஹார்பர் கூலின்ஸ் பப்ளிஷர்ஸ், பக். 255, விலை 250ரூ. பஞ்சாயத்து […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், பக். 150, விலை 90ரூ. வரலாற்றில் பல முக்கிய சம்பவங்களின் ரகசியங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. பல கேள்விகளுக்கு, விடை கிடைக்கவில்லை. அவற்றில் 37 மர்மமுடிச்சுக்கள், இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நிலவில், ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தாரா. நெப்போலியன் எப்படி இறந்தார். ஹிட்லரின் டைரி இருக்கிறதா, எவரெஸ்ட்டை முதலில் அடைந்தவர் யார், அழியா காவியங்களை எழுதியவர் ஷேக்ஸ்பியர் தானா, ராபின் ஹுட் கற்பனை கதாபாத்திரமா என, இதுவரை நாம் ஏற்றுக்கொண்டிருந்த கருத்துகளை, இந்த புத்தகத்தின் மூலம் சந்தேகிக்க […]

Read more

திருக்குறள் தெளிபொருள்

திருக்குறள் தெளிபொருள், புலவர் வ. சிவசங்கரன், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 304, விலை 70ரூ. இம்மைக்கும், மறுமைக்கும் வழிகாட்டும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்புகளே மறைகள் (வேதங்கள்). அவையெல்லாம் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்து போதிப்பவையாக விளங்கும். ஆனால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், சமயம் சாராத உலகப் பொதுமறையாக விளங்குவது. எனவே, உலகின் பல மொழிகளிலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மொழிக்கே ஒரு தனிச் சிறப்பைக் கூட்டியுள்ளது. இலக்கிய இலக்கண வளமை மிக்க திருக்குறள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகவும், கடைச் […]

Read more

I am a born liar

I am a born liar, ஹாரி என் ஆப்ரகாம். கலைஞனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை இத்தாலிய இயக்குனர் பெட்ரிக் பிலனியின், வாழ்க்கை வரலாற்றைக் கூறும், I am a born liar  என்ற நூலை அண்மையில் படித்தேன். ஹாரி என் ஆப்ரகாம் நிறுவனம், இந்நூலை வெளியிட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் போற்றிய இயக்குனர்களில், பெட்ரிக் பிலனி முக்கிய மாணவர், ஓவியர், கவிஞர், சினிமா இயக்குனர் என, பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் எப்படி சினிமா எடுத்தார். அதற்கான […]

Read more

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், பக். 336, விலை 350ரூ. கர்ப்பத்தை ஒரு தாய் உணர்வது எப்படி? மகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக்கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், […]

Read more
1 5 6 7 8