தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், ந. முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 160ரூ.
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந.முத்துமோகனின் 9 தலைப்புகளில் வெளியான நேர்காணல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி,8/10/2014.
—-
ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச், (மாற்றத்திற்கான ஒரு சாதனம்), ஏ.பி.ஜெ. அப்துல்காலாம், வி. பொன்ராஜ், ஹார்பர் கூலின்ஸ் பப்ளிஷர்ஸ், பக். 255, விலை 250ரூ.
பஞ்சாயத்து முதல் பால்லிமெண்ட் வரை அனைத்து துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சமூக, பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இந்த புத்தகத்தில், கலாம், அழகாக விவரித்துள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும், இதை தவறாமல் படிக்க வேண்டும். பஞ்சாயத்து, சட்டசபை, பார்லிமென்ட் மற்றும் சாலை, குடிநீர், ஆற்றல், சுற்றுச்சூழல் என ஒவ்வொரு துறைக்குமான வழிகளை உதாரணங்களுடன் தந்துள்ளார். ஐஸ்லாந்தில், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்ட, தன் வெளிநாட்டு சுற்று பயணங்களில் கிடைத்த அனுபவங்கள், காணி நிலம் வேண்டும் என்ற மகாகவி பாரதியார் பாடல்களின் மேற்கோள்கள், என படிக்க ஆவலை தூண்டும் விதத்தில் எளிய ஆங்கிலத்தில் அழகாக விளக்கியுள்ளார். -மேஷ்பா. நன்றி: தினமலர்,6/10/2014.