கடலோரக் கவிச்சோலை
கடலோரக் கவிச்சோலை, அருள்திரு. ஸ்டீபன் கோமஸ், சமூக சமய ஆய்வுக் கழகம், வலம்புரி நாதம் வெளியீடு, வீரபாண்டியன்பட்டினம், விலை 500ரூ.
மீனவர்கள், பரதவர்கள் என சமகாலத்தில் அழைக்கப்படும் மக்கள் வரலாற்று நூல்களாலும் பொது சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் வரலாற்றில் இழந்த இடத்தை மீட்கும் சொற்பமான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த நூல். 17ஆம் நூற்றாண்டு முதல் பரதவ சமூகத்தினர் பங்களித்த சந்தப் பாட்டுகள், கவிதைகள், கட்டுரைகளை இரண்டு பாகங்களாக 2000 பக்கங்களுடைய நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். தங்களின் வரலாற்றுப் பெருமை, நம்பிக்கைகள், தொழில், சமூகம் குறித்த சித்திரத்தைக் காட்டும் இந்தப் படைப்புகள் இந்த சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. தற்போது மீன்பிடி சமூகமாக அறியப்பட்டாலும் ஒரு காலத்தில் கடலோடிகளாக இவர்கள் உலக வர்த்தகத்தில்முக்கிய பங்காற்றினார்கள் என்று வரலாற்றாளர்களிடையே ஒரு பார்வை உண்டு. அதை உறுதிப்படுத்துவது போன்ற செழுமையான படைப்புகளைக் கொண்ட தொகுப்பு இது. பழங்குடித் தன்மையுடன் சிறு குழுக்களாக பிரிந்து கிடப்பதாலேயே இந்த சமூகத்தை பிற்படுத்தப்பட்ட சமூகமாக சித்தரிக்கும் போக்கு உள்ளது. ஆனால் விரிவான இலக்கிய படைப்புகளைக் கொடுத்த ஒரு சமூகம் அப்படி இருந்திருக்குமா என்ற வரலாற்றுக் கேள்வியை எழுப்பக்கூடியது இந்த நூல். -எஸ். செந்தில்குமார், நன்றி: ஃபெமினா, 1/10/2014.
—-
தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் ஞாலன் சுப்பிரமணியம், சுகுமாறன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html மாக்கேஸின் முக்கியமான படைப்பை தமிழில் பதிப்பித்திருக்கிறார்கள். மொழி நடையின் செழுமையிலும் கச்சிதமான மொழிபெயர்ப்பிலும் வசீகரிக்கும் நூல். நன்றி: ஃபெமினா, 1/10/2014.