மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள், ஜான் முருக செல்வம், ஜாய்ஸ் முருக செல்வம், பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. பாலுணர்வு என்றாலே, வெளிப்புறத்தில் முகம் சுளித்தும், உள்ளுக்குள் ரசத்தும் பழகிப்போன மனித இனத்துக்கு, மனவளர்ச்சி குன்றியோரின் உணர்ச்சிகள் புரியுமா என்பது தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே ஜான் முருக செல்வமும், ஜாய்ஸ் முருக செல்வமும், மிகத் தெளிவாக இந்த நூலை எழுதியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய ஆண், பெண்கள் பருவ வயதை எட்டும்போது உடலில் எற்படக்கூடிய மாற்றங்கள், பாலுணர்வால் அவர்கள் ஆட்கொள்ளப்படும் […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், சென்னை -2, விலை 275ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html 21ம் நூற்றாண்டிற்கும் 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடும் உ.வே.சா. தமிழ் தாத்தா உ.வே.சா. சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். 21ம் நூற்றாண்டிற்கும், 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடுகிற அவர் எழுதிய அந்த புத்தகத்தில், 19ம் நூற்றாண்டில் தமிழகம், அங்கே வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களுடைய உணவு பழக்கம், […]

Read more

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள்

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பள்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். தொன்மையான கோள வடிவ நாணய்ங்கள், நாணயத்தின் முன்புறத்தில் யானைச்சன்னம் பொறித்த நாணயங்கள், முன்புறம் செழிய வெள்ளீய வட்ட நாயணங்கள், செழியன் பெயர் பொறித்த நாணயங்கள், மாறன் பெயர் பொறித்த நாணயங்கள், சங்க கால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்க காலப் பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறித்த நாணயங்கள் ஆகியவற்றைப் பற்றி […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், முனைவர் சு. சதாசிவம் மற்றும் பலர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 570, விலை 500ரூ. தெய்வமாக கருதிய இயற்கை மருத்துவத்தை இழந்து நிற்கும் தமிழ் சமூகம் தமிழ் சமூக மரபும் மாற்றமும் என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுகளின் தொகுப்பு நூலிது, 142 ஆய்வாளர்களின் கட்டுரைகள், 12 பதிப்பாசிரியர்கள் மூலம் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. தொல்காப்பியம் தொடர்பான எட்டு கட்டுரைகளும், சங்க இலக்கியம் சார்ந்த 42 கட்டுரைகளும், மரபும் மாற்றமும் என்ற தலைப்பை உள்ளடக்கிய வகையில் […]

Read more

மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம்

மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் மிக்க, தூய்மையான தமிழ்மொழி, இன்று பிறமொழி கலப்பால், தன்சீர் இழந்து வருவதும், தம் பண்பாட்டு சிறப்பை தமிழர்கள் மறந்து வருவதும் கண்ட இந்நூலாசிரியர், மொழி, பண்பாடு இரண்டின் உயர்வையும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து போற்றி, கடைபிடித்து, பாதுகாக்க வேண்டும் என்ற நன்நோக்கில் இந்நூலை படைத்துள்ளார். உண்டாலம்ம இவ்வுலகம் எனும் புறநானுறு, 182ம் பாடலை விளக்கிய நூலாசிரியர், இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுவதும் (பக். […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் […]

Read more

பனி

பனி, ஓரான் பாமுக், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 575, விலை 450ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-182-0.html இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் படைப்புகளில் அரசியலை வெளிப்படையாகப் பேசும் தனித்துவமான நாவல் பனி. துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸுக்கு ஒரு பனிக்காலத்தில் வந்து சேரும் பத்திரிகையாளன் காவின் அனுபவங்களே இதன் கதை. துருக்கியை மேற்கு நோக்கி நகர்த்த முனையும் மதச்சார்பற்ற நவஅடாதுர்க்கிய அரசுக்கும் மத அடையாளங்களைத் தமது சுயகௌரவத்தின் சின்னங்களாகப் பார்க்கும் பெண்களுக்கும் […]

Read more

சந்தன உவரியல் சாலமன் கப்பல்

சந்தன உவரியில் சாலமன் கப்பல், மோகன ரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 166, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-286-0.html திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் உவரி. இங்குதான், உலகப் புகழ் பெற்ற ஒபீர் துறைமுகம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் பின்பு தூர்ந்து மறைந்தது என்றும் சாலமன் மன்னன் வாழ்ந்த காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக ஒபீர் துறைமுகத்திலிருந்து சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் ஒபீர் […]

Read more

குற்றப் பரம்பரை அரசியல்

குற்றப் பரம்பரை அரசியல், பெருங்காமநல்லுரை முன்வைத்து, தொகுப்பாசிரியர் முகில்நிலவன், தமிழாக்கம் சா. தேவதாஸ், பாலை வெளியீடு, மதுரை, விலை 300ரூ. ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று மத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, […]

Read more
1 4 5 6 7 8