சிந்திப்போமா

சிந்திப்போமா?, தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-9.html இந்நூலாசிரியர் க.ப.அறவாணன் வேறு வேறு இதழ்களில் வேறு வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளையும், வானொலிக்காக எழுதிய உரைகளையும் தொகுத்தளித்துள்ளார். இவை அரசியல், சமுதாயம், வரலாறு, கல்வி, இலக்கியம் தொடர்பானவை. இப்படைப்புகளில் சமுதாயக் கவலையும், அக்கறையுமே மேலோங்கி இருக்கின்றன. பல நாடுகளை சுற்றுப்பார்த்த அனுபவங்களையும், கற்ற நூல்களையும் அடியொற்றி எழுதும் கருத்துக்கள் நிகழ்கால அரசியலுக்குப் பயன்பட வேண்டும். இயலுகிறவரை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதுதான் ஒரு சமுதாயம் உரை […]

Read more

பட்டம் ஒரு தலைமுறை கவசம்

பட்டம் ஒரு தலைமுறை கவசம், கி. முத்துச் செழியன், காவ்யா வெளியீடு, சென்னை, பக். 436, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-3.html மாணவர்கள் பல ஆண்டுகளாக முதலீடு செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நாள்தான் பட்டம் பெறும் நாள். பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, பட்டமளிப்புக்குத் தயார் செய்யும் கல்வி நிறுவனத்தினரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ள நூலாசிரியர், உலக பல்கலைக்கழகங்களின் வரலாறு, பட்டமளிப்பு விழாக்களின் தொடக்க காலம், […]

Read more

ஞானப் பொக்கிஷம்

ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.232, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-321-1.html அரிய பழம்பெரும் நூல்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி அதிலுள்ள ஞானத்தை விவரித்துள்ளது இந்நூல். நூலின் தொடக்கத்திலேயே அண்ணன், தாய், தந்தை போன்ற உறவுமுறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான விளக்கங்களுக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்க வைக்கும் அறப்பளீசுர சதகம், வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சுழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக் கூறும் நூல் […]

Read more

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல்

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல், திருமலர் எம்.எம். மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், சென்னை, பக்.152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-4.html தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் தனித்துவத்துடன் விளங்குவதும், இன்னும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப்பாடல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப் பாடல் ஆய்வு நூலாக நூலாசிரியரின் விளக்கத்துடன் வெளிவந்துள்ளது இந்நூல். பொதுவாக இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நபிகள் நாயகத்தின் அருமைப் […]

Read more

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், குமுதம் பு(து)த்தகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-361-2.html நோய் வருவதற்கு முன், அந்நோயை வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை, அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படுதல், தேவையற்ற உடல் பருமன் இவையே நோய்களுக்கான மூலமுதற்காரணம் என்பதை விளக்கியுள்ளார் டாக்டர் போத்தி. டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட குழந்தைகளுக்கான நோய்கள், மாரடைப்பு போன்ற […]

Read more

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், பக். 241, விலை 500ரூ. முஸ்லிம்களால் பெரிதும் போற்றத்தக்கவர், இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.அதற்கான காரணங்களை இஸ்லாம் மற்றும் பிற மத அறிஞர்கள், தங்கள் தங்கள் கோணத்திலிருந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படைப்பினங்களிலேயே நபிகளார் எப்படி உயர்வான படைப்பு என்பதற்கு, இறை வேதமாகிய திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலம் ஆதாரங்களை எடுத்துரைக்கிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான கட்டுரை. ஆங்கிலேயரான மைக்கோல் ஹார்ட், The Hundred என்ற தனது நூலில் யேசு […]

Read more

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பதற்கும், அப்படி ஏமாற்றப்பட்டால் அதற்கு தீர்வு காண்பது எப்படி? எங்கே முறையிடுவது? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் முதலான விவரங்கள் கொண்ட பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.   —-   மெழுகாய் கரையும் பெண்மைகள், வானதி பதிப்பகம், […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இந்நூல் கேரளாவின் உயரிய விருதான வயலார் அவார்டும், மத்திய சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற நாவல். கனவைப் போன்றதொரு கதை சொல்லல் முறையில், வாழ்க்கையின் குழப்பமான புதிர்களை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. மனித உறவுகளில் உண்டாகக்கூடிய பிளவுகளை, தாய் பிரியம்வதா மூலமும் அந்தத் தாயிடமிருந்து விலகிக்கொண்டிருக்கும் மகள் மூலமும் நாவல்  விவரிக்கிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதையை தமிழில் […]

Read more

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி, தமிழில் கிருஷ்ண பிரசாத், காவ்யா, சென்னை, பக். 1312, விலை 1300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரனின் தத்துவஞானி உலகப் புகழ் பெற்ற நூல். அவரது பிற நூல்களையும் தமிழுக்கு கொண்டுவரும் ஆர்வத்தால் இந்த நூல் உருவாகியுள்ளது. கலீல் ஜிப்ரனின் பிற படைப்புகளான இதயத்தின் ரகசியங்கள், முறிந்த சிறகுகள், குருவின் குரு, சிந்தனைகளும் தியானங்களும், நெஞ்சின் கண்ணாடி, இயேசு மனிதனின் மைந்தன் ஆகிய ஆறு நூல்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். […]

Read more

சிந்தனைச் சுடர்கள்

சிந்தனைச் சுடர்கள் (சிகரம் தொட சிறகு தரும் சிறுகதைகள்), யுவ சக்தி, யுவசக்தி வெளியிடு, சென்னை, பக். 64, விலை 20ரூ. இளைஞர் நலனை மையமாகக் கொண்டு இச்சிறு நூலில் உள்ள 30 (சிறுகதைகளும் புராணங்கள், சொற்பொழிவுகள், நூல்கள், இணையதளங்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் வாழ்வியலோடு தொடர்புடையவை. இளைய தலைமுறையைத் தட்டி எழுப்பக்கூடியவை. கதையின் கருவைப் பிரித்திருக்கும் நேர்த்தி, பரிணாம வளர்ச்சி, விரிவடைதல், மனவுறுதி, ஈடுபாடு, இலக்கறிதல், பேராசை, மனம், அளவுகோல், தூண்டுகோல், பண்புநலன், முன்னுதாரணம் என விரிகின்றன. ஒவ்வொரு […]

Read more
1 2 3 4 5 6 8