கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி
கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி, தமிழில் கிருஷ்ண பிரசாத், காவ்யா, சென்னை, பக். 1312, விலை 1300ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரனின் தத்துவஞானி உலகப் புகழ் பெற்ற நூல். அவரது பிற நூல்களையும் தமிழுக்கு கொண்டுவரும் ஆர்வத்தால் இந்த நூல் உருவாகியுள்ளது. கலீல் ஜிப்ரனின் பிற படைப்புகளான இதயத்தின் ரகசியங்கள், முறிந்த சிறகுகள், குருவின் குரு, சிந்தனைகளும் தியானங்களும், நெஞ்சின் கண்ணாடி, இயேசு மனிதனின் மைந்தன் ஆகிய ஆறு நூல்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். கலீல் ஜிப்ரனின் நூல்களைப் படித்தவர்களுக்கு அதன் உரைநடையைக் கவிதை ஆட்கொண்டுவிடுவதை உணர்ந்திருப்பார்கள். மொழிபெயர்ப்பில் அதே கவித்துவம் சாத்தியப்படாது. இருப்பினும் சொற்செறிவும், சொல்பயன்பாடும், சொல் அடுக்கும் தமிழ் வாசகனை அதே உணர்வுக்கு இட்டுச் செல்லும். அதற்கான முயற்சியை மொழிபெயர்ப்பாளர் செய்துள்ளார். இருப்பினும் முழு வெற்றி பெறவில்லை. பல இடங்களில் சோர்வு தட்டுகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனி நூல்களாக வெளியிட்டிருந்தால் விலையும் வாசகர்களுக்கு உகந்ததாக இருந்திருக்கும். The complete works of khalil Gibran (மொத்தம் 12 நூல்கள்) அமேசான்.காம் மூலம் ரூ.236க்கு பெற முடியும் என்றால், தமிழ் நூல்களுக்கு எத்தகைய விலை நிர்ணயிப்பது என்பதில் கவனம் வேண்டாமா? நன்றி: தினமணி, 5/10/2014.