பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை
பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், பக். 241, விலை 500ரூ.
முஸ்லிம்களால் பெரிதும் போற்றத்தக்கவர், இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.அதற்கான காரணங்களை இஸ்லாம் மற்றும் பிற மத அறிஞர்கள், தங்கள் தங்கள் கோணத்திலிருந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படைப்பினங்களிலேயே நபிகளார் எப்படி உயர்வான படைப்பு என்பதற்கு, இறை வேதமாகிய திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலம் ஆதாரங்களை எடுத்துரைக்கிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான கட்டுரை. ஆங்கிலேயரான மைக்கோல் ஹார்ட், The Hundred என்ற தனது நூலில் யேசு கிறிஸ்து, மோஸஸ், புத்தர், ஐன்ஸ்டீன், நியூட்டன், வாஷிங்டன், சர்ச்சில்… என்று உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைசிறந்தவர்களின் பட்டியல் முஹம்மது நபியை, ஆசிரியர் முதன்மையானவராக தேர்ந்தெடுத்த காரணத்தை முதலிடம் என்ற கட்டுரை விவரிக்கிறது. பார்னபாஸ் என்பவர் யேசு கிறிஸ்துவின் முக்கிய அப்போஸ்தலர்களள் ஒருவர். இவர் எழுதிய பார்னபாஸ் சுவிசேஷத்திலுள்ள, நபிகள் நாயகத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறாத சிறப்புகளை கிறித்துவ வேதத்தில் திருத்தூதர் என்ற கட்டுரை விளக்குகிறது. ஹிந்து மதத்தின் பவிஷ்ய புராணத்தில் நபிகளார் எங்கு, எப்போது, எந்த நாமத்தோடு தோன்றுவார், அவரது தாய், தந்தை பெயர், அவரது செயல்பாடு எல்லாம் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை ‘பவிஷ்ய புராணத்தில் பயகம்பர் நபி’ என்ற கட்டுரை எடுத்துரைக்கிறது. இப்படி முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் 41 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கபட்டு, சிறந்த பைண்டிங்குடன் வெளியாகியுள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 19/11/2014.