நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், குமுதம் பு(து)த்தகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 170ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-361-2.html நோய் வருவதற்கு முன், அந்நோயை வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை, அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படுதல், தேவையற்ற உடல் பருமன் இவையே நோய்களுக்கான மூலமுதற்காரணம் என்பதை விளக்கியுள்ளார் டாக்டர் போத்தி. டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட குழந்தைகளுக்கான நோய்கள், மாரடைப்பு போன்ற பெரியவர்களுக்கான நோயகள் என்று எல்லா நோய்களையும் கண்டறிந்து, அவற்றை வரவிடாமல் தடுக்கவும், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் எளிய தமிழில் விளக்கியுள்ளார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 17/11/2014.  

—-

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-341-3.html இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தம் ஏவி.மெய்யப்பன். ஏவி.எம். நிறுவனத்தைத் தொடங்கி அதை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலை நிறுத்த அவர் உழைத்த உழைப்பை விறுவிறுப்பு குறையாமல் தந்துள்ளார் நுலாசிரியர். உலக சினிமாவின் போக்கையும் அதன் வளர்ச்சியையும் கவனித்து அதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்ததோடு, தமிழ் சினிமா வளர அவர் அளித்துள்ள பங்களிப்பு படிக்கப் படிக்க வியப்பு. தன் தந்தையாரோடு பயணித்து திரைப்படத் தொழிலைக் கற்றதனால், தந்தையாரின் சினிமா சாதனைகளை திரைக்கதைபோல் சுவாரஸ்யப்படுத்த முடிந்திருக்கிறது. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பல ஆளுமைகளை உருவாக்கிய ஏவி.எம்.மின் விடாமுயற்சி, மன உறுதி, பக்குவம், நேர்மை, மேலாண்மை இதெல்லாம் அடுத்த தலைமுறையினருக்கான பாடம் என்பதை நூலில் நிறுவியுள்ளார் குமரன். -மணிகண்டன். நன்றி: குமுதம், 17/11/2014.

Leave a Reply

Your email address will not be published.