சங்க காலத்து தமிழ் நாணயங்கள்

சங்க காலத்து தமிழ் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, விலை 400ரூ. ‘தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சங்ககால தமிழ் நாணயங்கள் மற்றும் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலநூலை, நாணவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார். இந்த நூலை படித்தால் பழங்கால நாணயங்கள் மட்டும் அல்லாமல் பண்டைய காலங்களிலும் நாணய புழக்கத்தை கையாண்டு உள்ள தமிழர்களின் பெருமையை நன்கு அறிய முடிகிறது. அபூர்வமான நாணயங்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஆராய்ச்சியாளர்கள் […]

Read more

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. 4-5 மி.மீ. குறுக்களவுள்ள கோள வடிவிலான ‘நாணயங்கள்’ சிலவற்றைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. இவற்றின் எடை கூட ஒரு கிராமில் ஆறில் ஒரு பங்குக்கும் சற்றே கூடுதலாகத்தான் இருந்திருக்கிறது. 4மி.மீ. என்பது சராசரியான ஒரு நெல்மணியின் நீளம்தான் இருக்கும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே தமிழகத்தில் இப்படிப்பட்ட நாணயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். சின்னஞ்சிறியதாக இந்த மாதிரி ஒரு பொருள் நதிப்படுகைகள் போன்ற […]

Read more

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பதிப்பகம், சென்னை, பக். 132, விலை 400ரூ. நாணயவியல் ஆய்வாளரான நூலாசிரியர் திருநெல்வேலியில் இருபது ஆண்டுகளுக்கு மன் பாத்திரக் கடையில் வாங்கிய இரண்டு கிலோ பழைய நாணயங்களைப் பல மாதங்கள் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். நாணயங்களைக் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். கொற்கைப் பாண்டிய நாடு கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை தனி நாடாக இருந்திருக்கலாம். சங்க […]

Read more

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள்

சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பள்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். தொன்மையான கோள வடிவ நாணய்ங்கள், நாணயத்தின் முன்புறத்தில் யானைச்சன்னம் பொறித்த நாணயங்கள், முன்புறம் செழிய வெள்ளீய வட்ட நாயணங்கள், செழியன் பெயர் பொறித்த நாணயங்கள், மாறன் பெயர் பொறித்த நாணயங்கள், சங்க கால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்க காலப் பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறித்த நாணயங்கள் ஆகியவற்றைப் பற்றி […]

Read more