சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பதிப்பகம், சென்னை, பக். 132, விலை 400ரூ.

நாணயவியல் ஆய்வாளரான நூலாசிரியர் திருநெல்வேலியில் இருபது ஆண்டுகளுக்கு மன் பாத்திரக் கடையில் வாங்கிய இரண்டு கிலோ பழைய நாணயங்களைப் பல மாதங்கள் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். நாணயங்களைக் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். கொற்கைப் பாண்டிய நாடு கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை தனி நாடாக இருந்திருக்கலாம். சங்க காலத்தில் கொற்கை பாண்டியர்கள், முத்து வணிகத்தின் காரணமாக பெரும் செல்வத்துடன் இருந்திருக்க வேண்டும் ஆகியவை நூலாசிரியர் கருத்து. கொற்கைப் பாண்டியர்கள் ஆண்ட நாட்டுக்கு தாமிரவருணி நாடு என்று பெயர் வழக்கில் இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள முழு முகமூடி கவசம் அணிந்த செழியன் நாணயம், மன்னர் தலைபொறித்த சதுர வடிவ நாணயம் உள்ளிட்டவை வித்தியாசமானவை. தரமான தாளில் நாணயத்தின் முன்புறமும், பின்புறமும் மூன்று மடங்கு பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படங்களுடன் வரைபடமும் சேர்ந்து நூல் அமைந்துள்ளது சிறப்பு. நன்றி: தினமணி, 2/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *