தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 285ரூ.

தமிழ் சினிமாவுக்கு தனி சிறப்பு உண்டு. தலை சிறந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், கதை-வசன ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ஏராளமானவர்கள் தமிழ் சினிமாவின் பெருமையை வளர்த்திருக்கிறார்கள். அவர்களில் 99 கலைஞர்களின் வரலாற்றை இதில் சுவைபட எழுதியுள்ளார் எழுத்தாளர் பி.எல். ராஜேந்திரன். கலைஞர்களுடைய வரலாற்றைப் படிக்கும்போது, திரை உலகத்தின் வளர்ச்சியையும் அறிந்துகொள்கிறோம். நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.  

—-

  வேங்கையின் சபதம், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, வலை 220ரூ.

சோழ வம்சத்தின் விடிவெள்ளி போல முளைத்த விஜயாலயன், தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். திரும்பிய திசையெல்லாம் பகைவர்கள். அதனால் சோழ சாம்ராஜ்யத்தை விரிவு செய்ய முடியவில்லை. ஆனால் தன் புதல்வன் ஆதித்தனுக்கு சாம்ராஜ்யக்கனலை நெஞ்சில் மூட்டியிருந்தான், விஜயாலயன். அந்தக் கனல் பெரும் நெருப்பாக பரவி தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும், சேர நாட்டையும் கைப்பற்றியது. சோழ நாட்டை பெரும் சாம்ராஜ்யமாக மலரச் செய்தது. கி.பி. 9ம் நூற்றாண்டின் வரலாற்றை தக்க சான்றுகளை ஆதரமாகக் கொண்டு கற்பனை வளத்துடன் இந்த வரலாற்று நாவலை படைத்திருக்கிறார் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 4/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *