சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள்
சங்ககால கொற்கைப்பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பள்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ.
கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். தொன்மையான கோள வடிவ நாணய்ங்கள், நாணயத்தின் முன்புறத்தில் யானைச்சன்னம் பொறித்த நாணயங்கள், முன்புறம் செழிய வெள்ளீய வட்ட நாயணங்கள், செழியன் பெயர் பொறித்த நாணயங்கள், மாறன் பெயர் பொறித்த நாணயங்கள், சங்க கால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்க காலப் பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறித்த நாணயங்கள் ஆகியவற்றைப் பற்றி நாணயங்களின் விரிவான ஆய்வு நோக்கில் இந்த நூலை படைத்திருக்கிறார் நூலாசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு அல்லது 2ம் நூற்றாண்டு எனக் கொள்வதில் தவறில்லை என்றும், பெருவழுதி நாணயம் தமிழகத் தொன்மை வரலாற்றின் மகுடமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் கூறுகிறார் நூலாசிரியர். நன்றி: தினத்தந்தி. 12/11/2014.
—-
ஹாஜி முராத், லியோ டால்ஸ்டாய், தமிழில் மெஹர் ப.யூ. அய்யூப், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 180ரூ. ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய புனைக்கதை ஹாஜி முராத். இந்த பெயரை கொண்ட அவார்இனப்புரட்சிகாரன், தனது சொந்தப் பழிவாங்கலுக்காகத் தான் இதுவரை எதிர்த்துப் போராடி வந்த ரஷயர்களோடு, ஓர் இக்கடான சூழ்நிலையில் செது கொண்ட உடன்பாட்டைக் கருவாக வைத்து எழுதப்பட்டதே இந்த கதை. படிப்பதற்கு விறுவிறுப்பாகவும், சிந்திக்கவும் வைக்கிறது. டால்ஸ்டாய்க்கு இறுதிப் படைப்பான இந்த படைப்பு, அவருடைய மறைவுக்கு பிறகு வெளியிடப்பட்டது. நன்றி: தினத்தந்தி. 12/11/2014.