மெய்வருத்தக் கூலி தரும்
மெய்வருத்தக் கூலி தரும், (வானொலி உரைகள்), த. ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 172, விலை 145ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-339-5.html கோவை மற்றும் சென்னை வானொலியில் இன்சொல் அமுது என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப்பட்ட உரைகள், படித்ததில் பிடித்தவை, அனுபவங்கள், சந்திப்புகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுளள்ன. முதல் கட்டுரை ஓயாத ஒற்றர் படையில் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ.வின் ஒற்றர் படைப் பிரிவில் இடம் பெற் றதேசபக்தரான அப்துல்காதர் எழுதிய கடித்தவரிகள் உருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 1906ஆம் அண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் மகாகவி பாரதியார் பங்கேற்றார். அப்போது விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதாவைச் சந்தித்துப் பேசியபோது அப்போது சமத்துவம் குறித்த பேச்சு எழுந்தது, மனைவியைச் சரிசமமாகப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடம் இல்லை என்றும் அதுபோன்ற மாநாட்டுக்கு அழைத்து வருவதால் என்ன பயன்? எனக்கேட்டார். இந்த பதிலால் வெகுண்ட சகோதரி நிவேதிதா, சமூகத்தில் சரிபாதி அடிமைப்பட்டு கிடக்கையில் மீதிப்பேர் மட்டும் விடுதலை பெற முடியுமா எனக்கேட்டார். இதுவே பாரதியாருக்குப் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பின்னர் அவர் எழுதிய இரண்டு நூல்களை நிவேதிதாவிற்கே சமர்ப்பணம் செய்ததாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு அவர் படித்த பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் நடந்த பாராட்டு விழாவின்போது, அவருக்கு இயற்பியலில் ஆர்வத்தை ஏற்படுத்திய பேராசிரியர் குண்டுராவின் காலில் அவர் விழுந்து வணங்கி குரு வணக்கம் செலுத்தியதாக மற்றொரு கட்டுரை தெரிவிக்கிறது. இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் கருத்துப் பெட்டகங்கள், வாசிக்கப்ட வேண்டியவை. நன்றி: தினமணி, 5/10/2014.