மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள், ஜான் முருக செல்வம், ஜாய்ஸ் முருக செல்வம், பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ.

பாலுணர்வு என்றாலே, வெளிப்புறத்தில் முகம் சுளித்தும், உள்ளுக்குள் ரசத்தும் பழகிப்போன மனித இனத்துக்கு, மனவளர்ச்சி குன்றியோரின் உணர்ச்சிகள் புரியுமா என்பது தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே ஜான் முருக செல்வமும், ஜாய்ஸ் முருக செல்வமும், மிகத் தெளிவாக இந்த நூலை எழுதியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய ஆண், பெண்கள் பருவ வயதை எட்டும்போது உடலில் எற்படக்கூடிய மாற்றங்கள், பாலுணர்வால் அவர்கள் ஆட்கொள்ளப்படும் விதம், அந்த நேரத்தில் அவர்களின் நடத்தை எத்தகையதாக இருக்கும், உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கல்வி முறை, அவர்களோடு பழகும் விதம் என, மிக விரிவாக இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் விரும்பத்தகாத செய்லகளில் ஈடுபடும்போது அந்த எண்ணத்திலிருந்து அவர்களை எப்படி மாற்றுவது என்பது போன்ற பல விஷயங்கள், இந்த நூலில் அடங்கி உள்ளன. மனவளர்ச்சி குன்றியோரைப் பராமரிப்போர், அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் கொண்ட நூல் இது. -பானுமதி. நன்றி: தினமலர்,9/11/2014.  

—-

ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ வழிமுறைகள், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 70ரூ.

ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வதற்குத் தேவையான தகவல்களின் தொகுப்பு நூல். ஒவ்வொரு உணவுப் பண்டங்களில் உள்ள கலோரிகள், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நோய் நொடியின்றி வாழ வழிகாட்டும் நூல். நன்றி: தினத்தந்தி, 10/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *