வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. எந்தக் காலத்துக்கும், எந்த இனத்தாருக்கும் பொருந்தும் திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அத்தகைய திருக்குறளில் ஏராளமான விஞ்ஞான கருத்துக்களும் பொதிந்து இருக்கின்றன என்ற அதிசய தகவலைத் தரும் இந்தப் புத்தகத்தின், 12 தலைப்புகளில் அடங்கிய பல திருக்குறள்களில் என்ன என்பதை, அறிவியல் பூர்வமாக மிகச் சிறப்பாக, படங்களுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே படித்த குறள்களுக்குள் இவ்வளவு விஞ்ஞானம் அடங்கி இருக்கிறதா என்ற வியப்பு இதனைப் படிக்கும் போது மேலிடுகிறது. […]

Read more

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள், ஜான் முருக செல்வம், ஜாய்ஸ் முருக செல்வம், பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. பாலுணர்வு என்றாலே, வெளிப்புறத்தில் முகம் சுளித்தும், உள்ளுக்குள் ரசத்தும் பழகிப்போன மனித இனத்துக்கு, மனவளர்ச்சி குன்றியோரின் உணர்ச்சிகள் புரியுமா என்பது தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே ஜான் முருக செல்வமும், ஜாய்ஸ் முருக செல்வமும், மிகத் தெளிவாக இந்த நூலை எழுதியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய ஆண், பெண்கள் பருவ வயதை எட்டும்போது உடலில் எற்படக்கூடிய மாற்றங்கள், பாலுணர்வால் அவர்கள் ஆட்கொள்ளப்படும் […]

Read more