நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும்போதுதான், முழுமை பெறுகிறான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபின், வேறு யாருடைய நடிப்பையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படி ரசித்தாலும், அவர்களுக்குள் சிவாஜியின் வடிவத்தை பார்க்கிறேன் என்ற ஒய்.ஜி.மஹேந்திரா சிவாஜியுடன் நடித்தபோது, பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை ரசித்து, சுவைத்து, சுவாசித்து கட்டுரை வடிவில் படைத்திருக்கிறார். சிவாஜி பற்றிய அரிய புகைப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச்செய்து, அவரது இனிய […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more