புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்?

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்? திண்ணியத்தை முன்வைக்கிறது… ,பேராசிரியர் பி, எஸ், பன்னீர்செல்வம், மேன்மை வெளியீடு, விலை 400 ரூ. தமிழுக்கும் தலித்திய ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகளையும் தலித்துகளின் கலாச்சார பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து உரையாற்றி வருபவர் பேராசிரியர் பி.எஸ். பன்னீர்செல்வம். இந்த ஆய்வு நூலும் அவரது பயணத்தின் ஓர் அங்கமே. இந்த சமூகம் எதிர்கொள்ளும் அநீதியை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கான தீர்வை முன்னிறுத்துவதாகவும் இந்நூல் இருக்கிறது. திண்ணியம் சம்பவத்தை முன்வைத்து புறநானூற்றின் அடிப்படையில் உரையாடியிருக்கிறார் பி. எஸ். பன்னீர் […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும்போதுதான், முழுமை பெறுகிறான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபின், வேறு யாருடைய நடிப்பையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படி ரசித்தாலும், அவர்களுக்குள் சிவாஜியின் வடிவத்தை பார்க்கிறேன் என்ற ஒய்.ஜி.மஹேந்திரா சிவாஜியுடன் நடித்தபோது, பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை ரசித்து, சுவைத்து, சுவாசித்து கட்டுரை வடிவில் படைத்திருக்கிறார். சிவாஜி பற்றிய அரிய புகைப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச்செய்து, அவரது இனிய […]

Read more