நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும்போதுதான், முழுமை பெறுகிறான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபின், வேறு யாருடைய நடிப்பையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படி ரசித்தாலும், அவர்களுக்குள் சிவாஜியின் வடிவத்தை பார்க்கிறேன் என்ற ஒய்.ஜி.மஹேந்திரா சிவாஜியுடன் நடித்தபோது, பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை ரசித்து, சுவைத்து, சுவாசித்து கட்டுரை வடிவில் படைத்திருக்கிறார். சிவாஜி பற்றிய அரிய புகைப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச்செய்து, அவரது இனிய நினைவுகளை, நிகழ்வுகளை பொக்கிஷமாக தொகுத்து அளித்ததுடன், சிவாஜியை கடவுளாகவே ஏற்று சுவாசித்திருககிறார் ஒய்.ஜி. மஹேந்திரா. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.  

—-

ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் சொல்லகராதி, முகவை சீனிவாசன், ஏ,கே,எஸ், புக்ஸ்வேல்ட்,  சென்னை, விலை 130ரூ.

ஆங்கிலச் சொற்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் அர்த்தம் கூறும் கையடக்க அகராதி (டிக்ஷ்னரி) வெளிவந்துள்ளது. மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உதவக்கூடியது. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.  

—-

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கர்ராமன், விஜயா பதிப்பகம், சென்னை, விலை 45ரூ.

வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 4/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *