நான் வந்த பாதை
நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ.
சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, சிவாஜி கணேசன், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களிடம் கொண்டு இருந்த நேசத்தையும், அவர்களுடனான ருசிகர சம்வங்களையும், தேர்தலில் போட்டியிட்டு முதல் நடிகர் என்ற முறையில் தனது அரசியல் அனுபவங்களையும் உள்ளது உள்ளபடி மனம் திறந்து கூறி இருப்பதன் மூலம், பிரமிக்க வைக்கும் பல அரிய தகவல்களை தந்து இருக்கிறார். சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி அரசியலில் ஆர்வம் கொண்டவர்களும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி. 12/11/2014.
—-
அறிவுரைகள் ஜாக்கிரதை, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 45ரூ.
முனைவர் நா.சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. இதில், நம்பிக்கை அதானே எல்லாம், வெற்றிக்கு தயாராகுங்கள், மனிதர்களைப் படியுங்கள், தோல்விகளைத் தோற்கடியுங்கள் என்பன போன்ற 15 தலைப்புகளில் மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைகளைத் தூவி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. 12/11/2014.