பனி
பனி, ஓரான் பாமுக், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 575, விலை 450ரூ.
To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-182-0.html இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் படைப்புகளில் அரசியலை வெளிப்படையாகப் பேசும் தனித்துவமான நாவல் பனி. துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸுக்கு ஒரு பனிக்காலத்தில் வந்து சேரும் பத்திரிகையாளன் காவின் அனுபவங்களே இதன் கதை. துருக்கியை மேற்கு நோக்கி நகர்த்த முனையும் மதச்சார்பற்ற நவஅடாதுர்க்கிய அரசுக்கும் மத அடையாளங்களைத் தமது சுயகௌரவத்தின் சின்னங்களாகப் பார்க்கும் பெண்களுக்கும் இடையில் நிகழும் மோதல்கள், அதன் விளைவாக பெண்களின் தற்கொலைகள் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன இந்த நாவல், மனித உறவுகளின் முரண்பாடுகளை கவித்துவமாகச் சித்திரிக்கிறது. பனிப்பொழிவு தற்காலிகமாக நின்று, ஒரே ஒரு பனிச்சருகு மட்டும் தனியாக அது இறுதியாகப் புதைந்து நல்லடக்கம் காணப்போகும் தரையை நோக்கி அந்த குளிர் இரவின் இருட்டில் ஆடி, ஆடி இறங்கிக் கொண்டிருந்தது என்ற வர்ணனை நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கிறது. தற்கொலை என்பது தெய்வ நிந்தனை என்ற அற்புதமான வாசகம் இடம் பெற்றுள்ளது. துப்பறியும் நாவலின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் செல்லும் இந்தப் படைப்பு துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கிறது என்றால் அது மிகையல்ல. நன்றி: தினமணி, 5/10/2014.