நான் கண்ட ஜப்பான்
நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பெரியவர்களிடம் இளைஞர்கள் காட்டும் மரியாதை, திருமண முறையில் காணப்படும் மாற்றங்கள் ஆகியவை பற்றிய விவரங்களையும் ஆசிரியர் விவரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.
—-
நரம்பு தளர்ச்சி நீங்க, ஜெகாதா, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 15ரூ.
சித்தர்கள் அருளிய நரம்பு சம்பந்தப்பட்ட நோய் நீங்க எளிய மருத்துவம், யோக, மூலிகைகள் முதலான தகவல்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/10/2014.