நோய்களிலிருந்து விடுதலை

நோய்களிலிருந்து விடுதலை, அ.உமர் ஃபாரூக், எதிர் வெளியீடு, பொள்ளச்சி, விலை 60ரூ.

ஒரு சிறிய நூல்கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல். 86 பக்கங்களில் நமது உடல் குறித்த அடிப்படை புரிதலையும் உடலின் இயக்கம் பற்றிய ஞானத்தையும் வழங்குகிறார் ஹீலர் அ. உமர் ஃபாரூக். அக்கு பஞ்சர் சிகிச்சை முறை முன்னோடிகளில் ஒருவரும் தெளிந்த நீரோடை போல அது குறித்து எழுதி வருபவருமான இவர் தனது ஞானத்தின் ஒரு பகுதியை இந்த நூல் மூலம் நமக்குத் தருகிறார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சொல்லித் தரும் உடல் இயக்க முறைகளையே விவரிக்கிறார். ஆனால் அதில் இவர் கொடுக்கும் காட்சிப்படுத்தல், அலோபதி மருத்துவத்தின் போதாமைகள், குறைகளைக் கடந்த ஒரு புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது. மனித உடலில் வயிறு பற்றிய இவரது விளக்கம் நமது கண்களைத் திறந்து வைக்கக்கூடியது. மனித இரைப்பை 15,2 செ.மீ நீளமும் 15,2செ.மீ அகலமும் கொண்டது என்பதை கூகிள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதன் அடிப்படையில் சராசரியாக குடிக்க வேண்டிய தண்ணீர் அளவு உள்ளிட்ட கணக்குகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை எளிதாக உணர்த்திவிடுகிறார். தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் அரிய தானியங்கி அமைப்புதான் நமது உடல் என்பதே இவரது வாதத்தின் சாராம்சம். அது தன்னைத் தானே சரி செய்துகொள்ள உதவுவதற்கு பதில், அதன் சரிசெய்துகொள்ளும் ஓட்டத்தை நவீன மருத்துவம் இடையூராக இருக்கிறது என்ற அவரின் வாதம் பொருத்தமானதே. -எஸ். செந்தில் குமார். நன்றி: ஃபெமினா, 1/10/2014.  

—-

நோய் தீர்க்கும் யோகாகசனங்கள், டாக்டர் ர. மணிவாசகம், நலம் வெளியீடு, சென்னை, விலை 175ரூ.

முக்கியமான ஆசனங்களை தெளிவான புகைப்பட வழிகாட்டுதலுடன் விளக்கியிருக்கிறார்கள். அதுபோக, எந்தெந்த யோகாசனங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்க வல்லது என்றும் கொடுத்திருக்கிறார்கள். நமது உடலுக்கு நாமே மருத்துவராக ஒரு அரிய வாய்ப்பு. நன்றி: ஃபெமினா, 1/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *