மனம் செய்யும் மாய வித்தை
மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ.
பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது.
பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், தியானம் செய்வதன் பயன், உறக்கத்தின் அவசியம் போன்ற பல அம்சங்களை விளக்கும்போது அவற்றுக்குரிய ஜென் கதைகள் போன்றவற்றையும் தந்து இருப்பதால், இந்த மனவியல் நூலை ரசித்துப் படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 28-11-21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818