மகா பெரியவா
மகா பெரியவா, வீயெஸ்வி, விகடன் பிரசுரம், விலை 350ரூ.
காஞ்சி மடாதிபதியாக இருந்தவரும், பக்தர்களால் மகா பெரியவா என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
வாழ்க்கைக் குறிப்பை விவரித்து வரும் அதே நேரம், இடையிடையே காஞ்சிப் பெரியவர் வழங்கிய உரைகளின் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது. காஞ்சிப் பெரியவருக்கும், ஆங்கிலேயரான பால்பிரண்டன் என்பவருக்கும் இடையே நடந்த உரையாடல், மகாத்மா காந்தி, காமராஜர் போன்றவர்கள் நடத்திய சந்திப்பு போன்றவை சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. காஞ்சிப் பெரியவரின் பலவிதமான வரைபடங்கள், நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 28-11-2-21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818