புன்னகை ஒரு அரிய ரோபோ
புன்னகை ஒரு அரிய ரோபோ, மோகன் சுந்தரராஜன், அறிவியல் ஒளி, விலைரூ.90.
கணினிகள் மட்டுமல்லாது ரோபோக்களின் செயல்பாடும் இனி பெருகிவிடும். அறிவியலின் வளர்ச்சியில் நாடு மேலும் முன்னேற்றம் கண்டுவிடும். இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில், ஒரு தொடர்கதை மாதிரி ரோபோக்களின் செயல்பாடுகளை அறிவுப்பூர்வமாக விவரிக்கிறார் இந்த நுால் ஆசிரியர்.
இது போன்று ஒரு ரோபோவுக்கு வைத்துள்ள பெயரே புன்னகை. ரோபோக்களை மனித கட்டளைக்குப் பணிய வைத்து, மனிதன் நலம் பெற உதவி செய்கின்றனர் என்பதை புரியும்படி விளக்கும் கதை.
இன்று பழைய வரலாறு பற்றி ஆராய்வது போல, 2028ம் ஆண்டில் கதையை துவக்கி, முந்தைய வரலாற்றை ஆராயும் புதுமை செய்யப்பட்டுள்ளது.
– சீத்தலைச்சாத்தன்
நன்றி: தினமலர், 31/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818