ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150.


இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – பம்பாய் இடையே விமான தபால் போக்குவரத்தை சொந்தமாகத் தொடங்கினார் ஜே.ஆர்.டி. டாட்டா.

தனது குழுமம் நடத்தி வந்த மற்ற லாபகரமான தொழில்களைக் காட்டிலும் அன்றைக்கு அதிக லாபம் தராத விமானத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தி அதை வளர்த்தெடுத்து இந்திய விமானத்துறையின் முன்னோடியாக ஜே.ஆர்.டி. டாட்டா விளங்கினார். நாடு சுதந்திரமடைந்த பிறகு, டாட்டாவின் விமான நிறுவனம் “ஏர் இந்தியா’ என நாட்டுடைமையாக்கப்பட்டது. விமானத்துறையை அரசு கண்காணிக்கலாமே தவிர, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கூடாது என டாட்டா வாதிட்டார். ஆனால் அவரது வாதம் எடுபடவில்லை. தான் வளர்த்தெடுத்த நிறுவனம் என்பதால் ஊதியமில்லாமல் ஏர் இந்தியாவின் தலைவராகப் பணியாற்றினார். தரமான சேவைக்கும், நேரம் தவறாமைக்கும் முன்னுதாரணமாக ஏர் இந்தியாவை டாட்டா உருவாக்கினார். பின்னாளில் அரசியல் தலையீடு காரணமாக ஏர் இந்தியாவின் நிர்வாகத்தில் சீர்குலைவும் பெரும் நஷ்டமும் ஏற்பட்டன. பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை அரசிடமிருந்து டாட்டா குழுமம் ஏலத்தின் மூலம் சமீபத்தில் கைப்பற்றியிருக்கிறது.

தனது குழுமத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது, தேச வளர்ச்சியிலும் பங்கெடுத்த டாட்டா குழுமத்தை விரிவாக அலசும் இந்த நூல், இளம் தொழில்முனைவோர்களுக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் விதமாக பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது. 

நன்றி: தினமணி, 1/12/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *