பாச்சா

பாச்சா, கலைமாமணி விக்ரமன், யாழினி பதிப்பகம், சென்னை 108, பக்.112, விலை 50ரூ. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணு என்பர். ஆனால் தினம் ஆயிரம் பொய் சொல்லி தினசரி தனது குடும்ப காலட்சேபத்தை நடத்தி வரும் பாச்சா என்பவரின் டகல் பாச்சா வேலைகளை வேடிக்கையாக விவரித்து, ஒரு சமூக நாவல் எழுதியிருக்கிறார் சரித்திர நாவல்களுக்குப் பெயர் பெற்ற இந்நூலாசிரியர், இறுதியில் பாச்சாவின் மனமாற்றம், செயற்கையாக இல்லாமல் மிக இயல்பாக இருப்பது, நாவலின் தனிச்சிறப்பு. -சிவா   —-   நெல், காசி […]

Read more

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்)

தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்), ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 235ரூ. இந்த நூல் இரண்டாம் தொகுதியாக மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 274 கோவில்களைப் பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள், அமைவிடம், நால்வர் பாடியதெனில், அப்பாடல் என்ற பன்முகத் தகவல்களுடன், கோவிலின் படமும் தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். மேலும், திருத்தலங்களின் பழைய தமிழ்ப் பெயருடன் அதன் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. சைவ நெறியில் தோய்ந்து வாழும் அனைவரும் விரும்பும் நூல்.   —-   தென்னாட்டுச் செல்வங்கள் (பாகம்2), ஓவியர் […]

Read more

ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும்

ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும், விவேகானந்தன், இனியன், சம்பத், கல்பனாதாசன், இனியன் சம்பத் பதிப்பகம், சென்னை 90, பக். 842, விலை 500ரூ.  திராவிட இயக்க மேடைகளில் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் நாங்கள் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி இடம் பெறும். அதைச் சொல்லும் தகுதி உள்ள மிகச் சிலரில் ஈ.வெ.கி.சம்பந்த் ஒருவர் என்பதை இந்தப் புத்தகம் உணர வைக்கிறது. தினமணி கதிரில் 33 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. பெரியாரின் ரத்த உறவும், அண்ணாவின் நட்புறவும் இருந்தும்கூட திராவிட இயக்கத்தில் சம்பத் […]

Read more

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ. விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் […]

Read more

மருதநாயகம் கான் சாகிப்

மருதநாயகம் கான் சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 80ரூ.  To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் கான் சாகிப்பின் வீர வாழ்க்கையைக் கூறும் நூல். மருதநாயகம் கான் சாகிப் பிறவியிலேயே முகம்மது யூசுப் என்னும் இஸ்லாமியரா? இல்லை வேளாளர் குலத்தில் பிறந்த மருதநாயகமா? என்பன போன்ற சர்ச்சைகளை விவரிக்கும் நூலாசிரியர் முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். பிரெஞ்ச் படையில் போர் வீரனாகச் சேர்ந்த மருதநாயகம் கான் சாகிப் ஆற்காட்டுப் போரில் ஈடுபட்டதையும், துரோகத்தால் […]

Read more

சல்மா எழுதிய சாபம்( சிறுகதைகளின் தொகுப்பு )

சாபம், சல்மா, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்1, பக். 142, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-2.html சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மௌனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் […]

Read more

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்)

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்), தொகுப்பு – மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 272, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-5.html ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவ ஞானி தன் சீடர்களுக்கு மத்தியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் இடையிடையே கூறப்பட்ட தத்துவ முத்துக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் என்பதில் தொடங்கி உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருக்கங்கள். […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்,

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-836-5.html வாழ்க்கை என்றால் எத்தனையோ பிரச்சினைகள். அதிலும் இல்லற வாழ்க்கை என்றால், பிரச்சினைகளுக்கு அளவே இல்லை. பேசித் தீர்க்கப்பட வேண்டிய கணவன் மனைவி தகராறுகள்கூட, விவகாரத்துவரை போகின்றன. பலருடைய வாழ்க்கை சிக்கல்களை மறைந்த மனநல மருத்துவர் மாத்ருபூதம், திறமையாக தீர்த்து வைத்திருக்கிறார். இப்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் மூலமாகவே, அவர் டெலிவிஷன் தொடரிலும் புகழ்பெற்றார். இந்தப் புத்தகத்தில் […]

Read more

பிரேம்சந்த் கதைகள்

பிரேம்சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், 41பி சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 190ரூ. To buy this book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-7.html பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பிரேம்சந்த் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை துறந்தவர். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவருடைய படைப்புகளில் வறுமையும், துயரமும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்தில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அழகாக தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். […]

Read more
1 2 3 4 11