வட்டியும் முதலும்
வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ.
விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் தீராத கடன்தான் வாழ்க்கை. வட்டியும் முதலும் முடிவுறாது. நன்றி: தினமணி, 22/4/2013.
—-
குகை மனிதனும் கோடி ரூபாயும், பி. பாலசுப்ரமணி, சந்தியா பதிப்பகம், சென்னை 83. To buy this Tamil book onnline – www.nhm.in/shop/100-00-0000-807-8.html
பொருளாதாரமும், உளவியலும் இணைந்த பொருளாதாரச் செயலியல் (Behavioral Economics) என்னும் துறை தமிழில் அதிகம் எழுதப்படாத விஷயமாக இருந்த குறையை நீக்கியுள்ளது இந்த நூல். சிந்தனையிலும் அறிவிலும் இன்றைய மனிதர்கள் பல உச்சங்களை எட்டிவிட்டாலும் பணத்தைக் கையாளுவதில் குகைகளில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் குணமே இப்போதும் மேலோங்கி இருக்கிறது என்று கூறும் நூல். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது சாலையே இல்லாத ஊருக்கு காற்றே இல்லாத டயர் மாட்டிய வண்டியில் மிக வேகமாகச் செல்வது போன்று தூக்கி தூக்கி போடக்கூடியது என்பது ரசனைக்குரிய உவமை. மனிதமனம் ஒரு வளமான நிலம். ஏதாவது ஒரு கருத்து அதில் விதையாக விழுந்துவிட்டால் அது பெரும்பாலும் அழிவதில்லை. தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது மெல்ல மெல்ல மேலே வந்துவிடும். பின்னர் அதுவே நமது புத்தியின் ஒரு பகுதியாக மாறிவிடும். மனிதர்களின் பொருளாதார கணக்கீடுகள் பெரும்பாலும் இந்த புத்தியின் அடிப்படையிலும் ஆழ்ந்த நம்பிக்கையின் மீதும்தான் அமைகிறது என்பது தெளிவுபட விளக்கப்பட்டுள்ளது. பொருத்தமான திருக்குறளும் அதன் விளக்கமும் நூலில் இடம் பெற்றுள்ளது. கூறப்படும் கருத்துக்களுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. நன்றி: தினமணி, 22/4/2013.