ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்)
ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்), தொகுப்பு – மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 272, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-5.html
ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவ ஞானி தன் சீடர்களுக்கு மத்தியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் இடையிடையே கூறப்பட்ட தத்துவ முத்துக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் என்பதில் தொடங்கி உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருக்கங்கள். எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உயர்ச்சியைக் கொடுக்கிறதோ… அவை உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.. எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உணர்ச்சியைக் கொடுக்கவில்லையோ அவையெல்லாம் உங்களை முன்னேற்றிச் செல்லும் பாதைகள். இந்தக் கணத்தை நாம் மகிழ்ச்சியுடையதாக மாற்றிக் கொண்டால் அடுத்து வரும் கணத்தையும் நாம் சந்தோஷமாக ஆக்கிக்கொள்ளும் சந்தர்பப்ம் அதிகம் நமக்குக் கிடைக்கும். அன்பு ஒன்றுதான் தெய்வீகத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல்அடி. சரணாகதிதான் கடைசி அடி. இரண்டு அடிகள்தான் நம் வாழ்க்கையின் முழுப் பயணமும். ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் எனப்தைப் போல எண்ணி வாழுஙகள். யாருக்குத் தெரியும் இதுவே வாழ்வின் கடைசி கணமாகவும் இருக்கலாம். – இத்தகைய வாழ்க்கைக்கு அவசியமான ஓஷோவின் சிறந்த தத்துவ மொழிகள் ஆயிரம் இந்நூலில் உள்ளன. மிகச் சிறந்த தொகுப்பு. தினமும் ஒரு முறையாவது புரட்டிப் பார்க்க வேண்டிய நன்னூல். நன்றி: தினமணி, 15/4/2013.
—-
தமிழில் இலக்கணச் சிந்தனைகள், கா, அய்யப்பன், காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 396, விலை 350ரூ.
கி.பி. 13 முதல் கி.பி. 18 வரையுள்ள அதாவது, நன்னூலுக்குப் பின் இயற்றப்பட்ட இலக்கண நூல்களைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு. ஆய்வேடு பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. படித்துத்தான் புரிந்து கொள்ளவேண்டும். இலக்கணம் என்றாலே எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்நூலை எழுதியதன் மூலம், இலக்கண வல்லுநர் ஒருவரை இந்நூல் உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். மேற்குறித்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல்கள், உரைகளினூடாகத் தமிழ் இலக்கணச் சிந்தனை மற்றும் நூலாசிரியர், உரையாசிரியர், நிகழ்த்திய புலமைச் செயல்பாடு முதலியவை விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இலக்கண நூல்களின் முதல் பதிப்பு மாதிரிகளை இணைத்துள்ளது பயனுள்ள முயற்சி. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைப் பற்றிய விரிவான ஆய்வு. நன்றி: தினமணி, 15/4/2013.
| https://www.nhm.in/shop/100-00-0001-009-5.html |
