நான் பூலான்தேவி

நான் பூலான்தேவி, மரியே தெரஸ்கூன் பால் ராம்பாலி, தமிழில் மு.ந. புகழேந்தி, எதிர் வெளியீடு, பக். 364, விலை 300ரூ. எனக்காக நான் பேச ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், எனக்காக பலர் பேசியும், புகைப்படம் எடுத்தும் தங்களின் சுயநலத்துக்காக பலரும் பயன்படுத்திக் கொண்டனர். தாங்க முடியாத துயரங்கள், அவமானங்களை அனுபவித்த அப்பாவி பெண்ணான, என்னை பலரும் திட்டி, பழித்து, கேவலப்படுத்தினர். உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும், எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், […]

Read more

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான், கமலாதாஸ், தமிழில் மு.ந.புகழேந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 180, விலை 135ரூ. மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலாதாஸின் படைப்புகள் அனைத்துமே உயிரோட்டமானவை. அன்றாடம் ஏதாவது ஒரு மூலையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அவை அமைந்திருக்கும். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள குறுநாவல்கள், சுயசரிதை, சிறுகதைகள், கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. காலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மன்னிக்க முடியாத பாவமா காதல்? இந்த மகளை மன்னித்து விடுங்கள் ஆகிய படைப்புகள் வெளிப்படுத்தும் யதார்த்தம் நம்மை […]

Read more

மருதநாயகம் கான் சாகிப்

மருதநாயகம் கான் சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 80ரூ.  To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் கான் சாகிப்பின் வீர வாழ்க்கையைக் கூறும் நூல். மருதநாயகம் கான் சாகிப் பிறவியிலேயே முகம்மது யூசுப் என்னும் இஸ்லாமியரா? இல்லை வேளாளர் குலத்தில் பிறந்த மருதநாயகமா? என்பன போன்ற சர்ச்சைகளை விவரிக்கும் நூலாசிரியர் முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். பிரெஞ்ச் படையில் போர் வீரனாகச் சேர்ந்த மருதநாயகம் கான் சாகிப் ஆற்காட்டுப் போரில் ஈடுபட்டதையும், துரோகத்தால் […]

Read more