பாச்சா
பாச்சா, கலைமாமணி விக்ரமன், யாழினி பதிப்பகம், சென்னை 108, பக்.112, விலை 50ரூ.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணு என்பர். ஆனால் தினம் ஆயிரம் பொய் சொல்லி தினசரி தனது குடும்ப காலட்சேபத்தை நடத்தி வரும் பாச்சா என்பவரின் டகல் பாச்சா வேலைகளை வேடிக்கையாக விவரித்து, ஒரு சமூக நாவல் எழுதியிருக்கிறார் சரித்திர நாவல்களுக்குப் பெயர் பெற்ற இந்நூலாசிரியர், இறுதியில் பாச்சாவின் மனமாற்றம், செயற்கையாக இல்லாமல் மிக இயல்பாக இருப்பது, நாவலின் தனிச்சிறப்பு. -சிவா
—-
நெல், காசி வேம்பையன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 75ரூ.
இயற்கையோடு இணைந்து, காலம் காலமாக பயிரிடப்படும் சில சிறந்த நெற்பயிர்களை பற்றிய நூல். விவசாயிகளுக்கு பயன்படும்.
—-
வானம் தேடும் ராகங்கள், கவிஞர் ந. கருணாநிதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, விலை 60ரூ.
கருத்து வளம், சொல்லாட்சி நிறைந்த கவிதைகள். மழை போதும் என்ற தலைப்பில் உள்ள கவிதையில் போட்டனர் தார்ச்சாலை போன இடம் காணோம், கேட்டால் அடிவிழுமே, கேட்பார் யார்? என்ற வெண்பா ஆசிரியர் வெளிப்படைத் தன்மைக்கு அடையாளம். நன்றி: தினமலர் 21/4/2013.