தர்ம அதர்ம சரித்திரம்

தர்ம அதர்ம சரித்திரம், ச. காடப்பன், யாழினி பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. மகாபாரதம் ஒரு வாழ்வியல் நூல். மனிதன் தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் நூல். இதில் அப்பழுக்கற்றவர் என்று எவரும் இல்லை. முழுக்க முழுக்க அதர்மிகள் என்றும் அவருமில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் தத்துவத்தைச் சுட்டிக் காட்டும்படி படைக்கப்பட்டுள்ளன. இதில் 21 கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் நூல் இது. நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

செவ்வந்திப்பூ சிங்காரி

செவ்வந்திப்பூ சிங்காரி, விக்ரமன், யாழினி பதிப்பகம், 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை 108, விலை-ஒவ்வொரு புத்தகமும் ரூ. 75. விக்ரமன் எழுதிய சமூக சிறுகதைகள் சரித்திர நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற விக்கிரமன், சமூக நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதிய சிறந்த சமூகக்கதைகள் செவ்வந்திப்பூ சிங்காரி, சந்திரமதி பொன்னையா, அழகின் நிறம் ஆகிய மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மூன்று புத்தகங்களிலும் மொத்தம் 52 கதைகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இப்போது எழுதப்பட்டவைபோல இளமையுடன் உள்ளன. […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்தினம், பிருந்தா ஜயராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங், 47, NP ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, பக். 248, விலை 90ரூ குழந்தை சிறந்து விளங்காவிட்டால் பெற்றோர் சரியில்லை என்று சொல்லும் உலகம் இது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றே பெற்றோர் நினைக்கின்றனர். அவர்களுடன் எப்படி பழகுவது, எப்படி உறவை மேம்படுத்துவது, சிறந்தவர்களாக வளர்க்கும் முறைகள், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகள், குழந்தைகள் மன உலகம் எப்படி […]

Read more

பாச்சா

பாச்சா, கலைமாமணி விக்ரமன், யாழினி பதிப்பகம், சென்னை 108, பக்.112, விலை 50ரூ. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணு என்பர். ஆனால் தினம் ஆயிரம் பொய் சொல்லி தினசரி தனது குடும்ப காலட்சேபத்தை நடத்தி வரும் பாச்சா என்பவரின் டகல் பாச்சா வேலைகளை வேடிக்கையாக விவரித்து, ஒரு சமூக நாவல் எழுதியிருக்கிறார் சரித்திர நாவல்களுக்குப் பெயர் பெற்ற இந்நூலாசிரியர், இறுதியில் பாச்சாவின் மனமாற்றம், செயற்கையாக இல்லாமல் மிக இயல்பாக இருப்பது, நாவலின் தனிச்சிறப்பு. -சிவா   —-   நெல், காசி […]

Read more