தர்ம அதர்ம சரித்திரம்
தர்ம அதர்ம சரித்திரம், ச. காடப்பன், யாழினி பதிப்பகம், பக். 96, விலை 90ரூ.
மகாபாரதம் ஒரு வாழ்வியல் நூல். மனிதன் தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் நூல். இதில் அப்பழுக்கற்றவர் என்று எவரும் இல்லை. முழுக்க முழுக்க அதர்மிகள் என்றும் அவருமில்லை.
ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் தத்துவத்தைச் சுட்டிக் காட்டும்படி படைக்கப்பட்டுள்ளன. இதில் 21 கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் நூல் இது.
நன்றி: குமுதம், 5/4/2017.