மனச்சிறையில் சில மர்மங்கள்

மனச்சிறையில் சில மர்மங்கள், ஷாலினி, விகடன் பிரசுரம், பக்.96, விலை ரூ.90. சென்னை-2.

வெளியே பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத உடல், மனநலப் பிரச்னைகள் உள்ளவர்கள், அதைப் பற்றிக் கூறப்படும் பல்வேறு தவறான கருத்துகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மருத்துவ வியாபாரிகள் மனிதர்களின் இம்மாதிரியான அந்தரங்கமான பிரச்னைகளைப் பற்றி தவறாகப் பிரசாரம் செய்து, மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவறான கருத்துகளுக்கு மாற்றாக சரியான கருத்துகளை உளநலவியல் நிபுணரான நூலாசிரியர், இந்நூலில் முன் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

தோலில் பரு, தழும்பு போன்றவை இருந்தால் அதைப் பற்றி சிலர் எப்போதும் கவலைப்படுவது ஏன்? கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உளநலப் பாதிப்புகள் எவை?

வயதான, திருமணமான ஆண்களை சில இளம்பெண்கள் விரும்புவதற்கான உளவியல் காரணங்கள் இருக்கின்றனவா? ஒரு குழந்தை ஏன் எப்போதும் சோர்வாகவும், மன அழுத்தத்துடனும் இருக்கிறது? சிலர் வாயைத் திறந்தாலே எப்போதும் கெட்ட வார்த்தையாகப் பேசுவதற்கான உளவியல் காரணம் என்ன?

ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல், எப்போதும் துறுதுறுவென இருக்கும் சிறுவர்களுக்கு ஏற்பட்ட உளநலக் குறை எது? எதிர்பாராத நிகழ்வுகளால் மனம் ஒடிந்து போனவர்களின் நிலையை மாற்ற முடியுமா? இவ்வாறு பல உடல், மனநலப் பிரச்னைகள் பலவற்றைப் பற்றிய தெளிவை இந்நூல் ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி.

Leave a Reply

Your email address will not be published.