பிரேம்சந்த் கதைகள்
பிரேம்சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், 41பி சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 190ரூ. To buy this book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-7.html
பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பிரேம்சந்த் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை துறந்தவர். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவருடைய படைப்புகளில் வறுமையும், துயரமும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்தில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அழகாக தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.
—-
கொட்டாரம், நீல பத்ம நாபன் வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html
என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.
—-
எழுத்தாளர் சு. சமுத்திரம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ.
இந்திய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அனைத்து மொழிகளிலும் சாகித்திய அகாடமி (மத்திய அரசு நிறுவனம்) வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த சு. சமுத்திரத்தின் வாழ்க்கை வரலாறு இப்போது வெளிவந்துள்ளது. இதை, இரா. காமராசு சிறப்பாக எழுதியுள்ளார். சு.சமுத்திரம் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர், எழுதுபவர், அவருடைய நாவல்கள், சிறுகதைகள் அனைத்துமே சமூக அநீதிகளை சாடுபவை, இந்த அற்புத எழுத்தாளர் 2003ஆம் ஆண்டில் கார் விபத்தில் காலமானது அனைவருடைய இதயங்களையும் குலுங்கச் செய்த சோக நிகழ்ச்சி. அவர் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை எத்தனை காவியங்களைப் படைத்திருப்பார். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.