கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,

சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக்கம் 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html

சைவம் மற்றும் வைணவம் ஆகியவை, சமண புத்த சமயங்களை எப்படி எதிர் கொண்டன? சமணத் துறவிகள், புத்த துறவிகள் மக்கள் கூட்டமாக இல்லாத இடங்களை கைவிட்டு, ஏன் தள்ளியே வாழ்ந்தனர்? பெண்கள் ஏன், துறவிகளாக ஏற்கப்படவில்லை? நிர்வாணம் என்றால் என்ன? பட்டிமன்றம் என்ற சொல் எப்படி வந்தது? என்பது பற்றி, இந்த நூலில் காணலாம். கல்வி வளர்ச்சியில், கிறிஸ்தவம், மற்றும் இஸ்லாம் மதங்களின் தாக்கம் குறித்தும், இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்த சமுதாயம் பற்றி, அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்தப் புத்தகம் உதவிடும். நன்றி: தினமலர் 21/4/2013.  

—-

 

அன்பே யோகம், முனைவர் தா. நீலகண்ட பிள்ளை, செம்முதாய் பதிப்பகம், எண்.17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லப்பாக்கம், சென்னை 600064,

அன்பின் ஆற்றலைச் சொல்லும் நூல், தமிழைப் பக்தி மொழி என்பர். பக்தியின் உண்மை நிலை, பிற உயிர்களிடம் அன்பு செய்தலே. அன்பு இருந்தால், அகிலம் அமைதியாக விளங்கும் போட்டி, பொறாமை, கொலை, கொடுமை, வன்செயல் என எல்லாம் நீங்கி உலக சகோதரத்துவம் நிலைபெறும். பக்தியை வளர்ப்போம் பலன் பெறுவோம் என்கிறார் தா. நீலகண்ட பிள்ளை. அருமையான ஒப்பாய்வு நூல். அன்பும் பக்தியுமே உயர்த்தும். – எஸ். குரு. நன்றி: தினமலர் 21/4/2013.  

—-

 

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், புலமைப்பித்தன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 132, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-067-1.html

இலக்கிய உலகில், சகலரும் கொண்டாடும் இலட்சிய மனிதர் புதுமைப்பித்தன். அவருடைய சிறுகதைப் படைப்புகள், என்றும் சாகா வரம் பெற்ற புகழுக்குரியவை. கடவுள் வந்து ஒரு பக்தனோடு பழகி, உரையாடி, சமுதாய நிலையை, மானுட வாழ்வின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்கான, நையாண்டி நடைச் சமூக விமர்சனக் கதைதான். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் அதனோடு காலனும் கிழவியும், கயிற்றரவு போன்ற புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற பதினாறு கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள நூல் இது. – பவானி மைந்தன். நன்றி: தினமலர் 21/4/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *