வீழியும் காழியும்

வீழியும் காழியும், சண்முக. செல்வகணபதி, செ. கற்பகம், தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 96, விலை 100ரூ. திருஞானசம்பந்தர் அவதரித்த, அவருக்கு அம்மையப்பராகத் தோணியப்பர் காட்சி அளித்த சீகாழி என்கிற சீர்காழியும், திருமால் நாள்தோறும் ஆயிராம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து சக்கராயுதம்பெற்ற திருவீழிமிழலையும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலங்களாகும். காழிபாதி வீழிபாதி என்னும் வழக்காறு பெற்ற திருத்தலம் திருவீழிமிழலை. திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் படிக்காசு பெற்று, மக்களின் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம் துர்த்த தலமாகவும், ஞானசம்பந்தருக்கு சீர்காழி தோணியப்பர் […]

Read more

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம், முனைவர் க. முருகேசன், பக். 170, விலை 80ரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98. பாரதியின் பார்வையில் பிரபஞ்சம், கம்பனில் விழுமிய வாழ்வியல், கட்டடக்கலையைத் தொட்டிடும் சிலம்பு, மணிமேகலையில் அறம், இலக்கியங்களில் கொடியசைதல், குறுந்தொகையில் இலக்கிய நயங்கள், நற்றிணையில் பண்பாட்டுப் பதிவுகள், புறப்பாடல்களில் புரவலர், புலவர் மரபு, ஐந்தெழுத்து மந்திரச் சிறப்பும் திருநீற்று, மகிமையும், மணிவாசகரின் அறிவியல் சிந்தனைகள், ஆண்டாள் பாசுரங்களின் அகப்பொருள் கூறுகள் ஆகிய 11 கட்டுரைகளும் உண்மையாக செந்தமிழ் கோயிலுக்குச் சிற்பங்களாக அமைந்துள்ளன. […]

Read more