பஞ்சம், படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்
பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 312, விலை 160ரூ.
To buy this Tamil book online – https://www.nhm.in/shop/978-81-8493-522-6.html
உலகில் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடே இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவம் நிலவ வேண்டும். உணவு, உடை, வீடு முதலான அடிப்படை வசதிகளுடன் அனைத்து மனிதர்களும் வாழ வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைக் கொண்ட சித்தாந்தம்தான் கம்யூனிஸம். இதை 1848ல் உலகுக்கு அளித்தவர்கள் கார்ல் மார்க்ஸும் அவரது தோழரான ஃப்ரடெரிக் எங்கல்ஸும். பேச்சிலும், எழுத்திலும் பேரின்பத்தைத் தரும் இந்தத் தத்துவம், செயலுக்கு வந்தபோது உலகில் எத்தகைய பஞ்சத்தையும், படுகொலைகளையும், பேரழிவுகளையும் விளைவித்தது என்பதை இந்நூல் விவரிக்கிறது. தவிர, கம்யூனிஸத்தை முன்னெடுத்துச் சென்ற லெனின், ஸ்டாலின், மாவோ… போன்ற தலைவர்கள், தங்கள் அதிகார வெறியில் எப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? கார்ல் மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது சித்தாந்தப்படி இருந்ததா? திபேத்-சீனா பகைமைக்கு காரணம் என்ன? இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? லால் பகதூர் சாஸ்திரிக்கு தாஷ்கண்டில் நடந்தது என்ன? கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இதுவரை ஆடிய ஆட்டங்கள் என்ன?… என்பது முதலான பல்வேறு விஷயங்களை ஆதாரபூர்வமாகவும், புள்ளி விபரங்களோடும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். – பரக்கத். நன்றி: துக்ளக், 1/5/2013.