வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்
வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள், குன்றில் குமரன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ரஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கம் 160, விலை 60ரூ.
ஜென் என்பது இந்த நிமிடம் இங்கே வாழ்வது, நிமிடத்திற்கு நிமிடம் வாழ்வது, எது ஒன்றையும் சாட்சியாக நின்று கவனித்தல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது, என்பதை மையமாகக் கொண்டது. தியானம் என்ற சொல்தான் ஜப்பானில் ஜென்னாக உருவெடுத்தது என்கிறார் ஓசோ. அந்த வகையில் இந்த சிறிய புத்தகத்தில் நம் வாழ்வில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து, ஜென் தத்துவங்களை புரிய வைக்க ஆசிரியர் முயன்றுள்ளார். நன்றி: தினமலர் 21/4/2013.
—-
கோபுரம் காத்த கொற்றவன் (மாமன்னர் மருதுபாண்டியர்கள்), துரை. வி. சுந்தர பாண்டியன், பக்.118, விலை 40ரூ.
தமிழகத்தில் வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட மாமன்னன் மருது பாண்டியன் வரலாற்றைக் கூறும் நூல். அதற்கான செவிவழிச் செய்திகள், மற்ற தகவல்களை, வரலாற்றுடன் இணைத்து நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இருந்த போதும், மருது பாண்டியரை உறவினர் வட்டத்தில் கருத்துக்களை அடைத்து, அப்பார்வையில் எழுதப்பட்டிருப்பதால், படிப்பது நெருடலாக இருக்கிறது. நன்றி: தினமலர் 21/4/2013.