கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள்
கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், முனைவர் ப. சிவாஜி, இலக்கியா பதிப்பகம், 176, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், வாணிம்பாடி 636801.பக். 282, விலை 120ரூ-
எளிமையான தோற்றம், பண்போடு பழகும் குணம், வள்ளுவத்தை வாழ்வியலாக்க அரும்பாடுபடும் அன்பர். தொல்காப்பியர், வள்ளுவர், வள்ளலார் போன்றோரின் கருத்துக்களை நம் செவிகளில் கொண்டு வந்து சேர்க்கச் செய்யும் தமிழ்க் கடல் என்றெல்லாம் போற்றப்படும் வாழும் தமிழறிஞரான இளங்கமரனாரின் இலக்கிய இலக்கணப் பணிகளை பல்வேறு வகையாகப் பகுத்துப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அகல உழுதாலும் ஆழ உழு என்ற முதுமொழீக்கு ஏற்ப ஆழமாக நெஞ்சில் பதியவைக்கும் எளிய தன்மை கொண்ட எழுத்து நடை இளங்குமரனாருக்கு உரிய தனித்தன்மை. இளங்குமரனாரைப் பற்றி முதன்முறையாக முனைவர் பட்ட ஆய்வேடாக அளிக்கப்பட்டு தற்போது நூலாக வெளிவந்துள்ளது. முன்னுரை, முடிவுரை தவிர, தமிழ்ப்பணி, இலக்கியப்பணி, திருக்குறட்பணி, இலக்கணப்பணி என் நான்கு இயல்களில் தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு சிறப்பாகச் செய்துள்ளார் ஆய்வாளர். பின்னிணைப்பில் இளங்குமரனாரின் படைப்புகள்ன 330 நூல்கள் பற்றிய விவரங்களை இணைத்திருப்பது அடடா இத்தனை நூல்களா இவர் எழுதியிருக்கிறார் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சிறந்த ஆய்வு. நன்றி: தினமணி 10/10/20111