பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல, இளவேனில், இளா வெளியீட்டகம், விலைரூ.280. இன்றைய கல்வி முறை, குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை எவ்வாறெல்லாம் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், படிப்பைத் தவிர வேறெதையும் திறமையாகப் பார்க்காத அதன் குறைபாட்டையும் விளக்கும் நுால். ஆசிரியர் – மாணவர் இடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, வளர் இளம் பருவ மாணவ – மாணவியரின் உளவியலை அழகாகப் பேசுகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டிய மாணவர்கள் குறித்த முழுமையான அறிவைப் பெறுவதற்கு துணை புரியும். காதலும், கிரிக்கெட்டுமாய் கழிந்த பள்ளிப் பருவ […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில், கொற்றவை வெளியீடு, விலைரூ.250   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவம் பற்றி விளக்கும் நுால் இது. சிறு வயதில் கார்க்கி அனுபவித்த சித்ரவதைகளையும், அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வருகிறார், ஆசிரியர் இளவேனில். கஷ்டப்பட்ட காலத்திலும், பல நுால்களை தேடித் தேடி படித்து, தன் அறிவையும், கலை, இலக்கிய புலமையையும் வளர்த்த விதத்தையும் படிக்கும் போது, பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக உருவானதற்கான அடிப்படையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில்,  கொற்றவை வெளியீடு, பக்.288; ரூ.250. புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவ வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல். மாக்ஸிம் கார்க்கி எழுதிய எனது குழந்தைப் பருவம் 1957-இல் தமிழில் வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் மாக்ஸிம் கார்க்கியின் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, அதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டவிதத்தில், மிக புதியமுறையில் படைக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியரின் கவித்துவம் மிக்க உரைநடையில் ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் மக்கள் பட்ட துன்பங்கள் மிகத்துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இளமையிலேயே தந்தையை இழந்த சிறுவன் […]

Read more

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும், புரட்சியும் எதிர்புரட்சியும், இளவேனில், கார்க்கி பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சாதி ஏற்றத்தாழ்வு, மதவெறி, பெண் விடுதலை, தீவிரவாதம், ராணுவம், காவல்துறை, பாதல்சர்க்காரின் மூன்றாம் வகை நாடகம், பாப் இசை, நவீன ஓவியம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். கட்டுரைகளுக்கேயுரிய இறுக்கம் சிறிதுமின்றி, நூலாசிரியரின் உணர்வு வெள்ளம் வாசகர்களை இழுத்துச் செல்லும்வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் ஆசிரியர் முன் வைக்கும் கருத்துகள் மிகவும் […]

Read more