இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்

இளவேனில் எழுத்தில் வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும், புரட்சியும் எதிர்புரட்சியும், இளவேனில், கார்க்கி பதிப்பகம், பக். 240, விலை 200ரூ.

பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சாதி ஏற்றத்தாழ்வு, மதவெறி, பெண் விடுதலை, தீவிரவாதம், ராணுவம், காவல்துறை, பாதல்சர்க்காரின் மூன்றாம் வகை நாடகம், பாப் இசை, நவீன ஓவியம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். கட்டுரைகளுக்கேயுரிய இறுக்கம் சிறிதுமின்றி, நூலாசிரியரின் உணர்வு வெள்ளம் வாசகர்களை இழுத்துச் செல்லும்வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் ஆசிரியர் முன் வைக்கும் கருத்துகள் மிகவும் வித்தியாசமானவை. எடுத்துக்காட்டாக காவல்துறையை நவீனப்படுத்துவ என்பது புதிய புதிய தொழில்நுட்பங்களையும் குறி தவறாமல் தாக்க வல்ல துப்பாக்கிகளையும், மக்களை அச்சுறுத்தும் விதவிதமான எந்திரங்களையும் பயன்படுத்துவது என்றுதான் இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையை நவீனப்படுத்துவது என்பது உண்மையில் ஆயுதங்களிடமிருந்து அதை அப்புறப்படுத்துவதான். மார்க்சிய கண்ணோட்டத்தில் அன்றாட நிகழ்வுகளை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் அன்றாட நிகழ்வுகளிலிருந்து மார்சிய கண்ணோட்டத்தை ஒருவர் கைக்கொள்ளவும் உதவும் நூல். நன்றி: தினமணி, 15/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *