என்ன படிக்கலாம் வாங்க
என்ன படிக்கலாம் வாங்க, க.ம.ராஜேஷ் கந்தன், ஆர்த்தி ராஜேஷ் கந்தன், தென்றல் பதிப்பகம், பக்.600, விலை ரூ.380.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம்? என்று கேட்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொல்லியல்துறை, புள்ளியியல்துறை, லாஜிஸ்டிக், பேஷன் டிசைனிங், அனிமேஷன், மல்ட்டி மீடியா, வனத்துறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என விரிந்து கொண்டே செல்லும் பல்வேறு துறைகளில் ஒருவர் பணியாற்ற எதைப் படிக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது.
ஒரு குறிப்பிட்ட படிப்பு எதைச் சார்ந்தது, அந்தப் படிப்பினால் என்னென்ன பணிவாய்ப்புகள் கிடைக்கும், அந்தப் படிப்பைக் கற்றுத்தரும் கல்விநிறுவனங்கள் எவை, அதைப் படிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, பிற தகுதிகள் எவை, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பு எவ்வாறு பல்வேறு உட்பிரிவுகளாகப் பிரிந்து, அவையும் எப்படித் தனிப்படிப்புகளாக மிளிர்கின்றன என்பன போன்ற விவரங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
பல்வேறு தரப்பு மாணவர்களின் கல்வித் தேவைகளைக் கணக்கில் கொண்டு, அது தொடர்பான எல்லா விவரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
உலகின், நம்நாட்டின், நம் மாநிலத்தின் தலைசிறந்த கல்விநிறுவனங்கள், அவை தரும் கல்வி தொடர்பான பல்வேறு தகவல்களும் தரப்பட்டுள்ளன. கல்விக்கான கலங்கரை விளக்கம் இந்நூல்.
நன்றி: தினமணி, 2/8/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818