மனிதனைப் படைப்பது யார்?
மனிதனைப் படைப்பது யார்?, ஏ.கே. ராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150.
மனித படைப்பை, அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது இந்நுால். மனித படைப்புக்கு காரணம், விரும்பியபடி வாழ முடியுமா போன்ற சாதாரண கேள்விகளுக்கான மர்ம முடிச்சுகளை ஆராய்கிறது.
மனிதன் உருவான விதம், ஆற்றல், சக்தி, நிலம், நெருப்பு, நீர், சூரியன், கோள்கள் குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மனித மூளையின் செயல்பாடுகள், மனிதனின் தன்மைகள், பண்புகள் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள், கணித மேதைகளின் ஆற்றல், படைப்புகள், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், ஆட்சியாளர்களின் நுட்பமான அரசியல், பிரபலங்கள், ஏழைகளின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை உதாரணத்துடன் விவரிக்கிறது.
‘விஞ்ஞானிகள், முழு நேர ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிந்தனையாளர்கள், முழு நேர முனிவர்கள், யோகிகள், 80 சதவீதம் வரையும்; திறமையான மற்றவர்கள், 40 சதவீதம் வரையும்; சாதாரணமானவர்கள், 20 சதவீதம் வரையும் மூளையை பயன்படுத்துகின்றனர்’ போன்ற தகவல்களை தருகிறது. மனித செயல்பாடுகள், தீவிர தன்மை குறித்து ஆராய்கிறது.
– டி.எஸ்.ராயன்
நன்றி: தினமலர்,14/3/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031286_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818