தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம்

தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம், க.ஜெய்சங்கர், வசந்தவேல் பதிப்பகம், விலை: ரூ.80. ஜவ்வாது மலையில் மலைவாழ் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுக்கும் பட்டதாரித் தமிழாசிரியர் க.ஜெய்சங்கர். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்திலும் பிற பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை இந்த நூலில் வழங்கியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120. பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும். ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர்,  வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை. கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. […]

Read more