துரிஞ்சிலாற்றின் பயணம்
துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190.
நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது.
கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.
இதில், தமிழ் மக்களின் நீர் வழிபாட்டை அடிப்படையாக வைத்து பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. நீர்வழிபாடு எவ்வாறு நீண்ட காலமாக இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது.
பழைமையின் அடையாளமாக தாயாளுமை வழிபாடுகளும், இடைக்கால வள நாகரிக அடையாளமாக சமய வழிபாடுகளும், வரலாற்று அடையாளமாக நாயக்கர் கால தளவாயான ராசய்யன் வழிபாடும் என ஆற்றோட்டத்தின் மூலமாக திருவண்ணாமலை- விழுப்புரம் மாவட்ட கரையோர வாழ்வியலையும் வரலாற்றுப் பதிவுகளையும் நேரில் சென்று பார்த்து பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெய்சங்கர்.
துரிஞ்சிலாறு என்பது எங்கே தொடங்குகிறது, எந்த ஊர் வழியாகப் பயணிக்கிறது, எங்கெல்லாம் தடுப்பணைகள் உள்ளன, ஆற்றோரங்களில் காணப்படும் சிறுதெய்வ வழிபாடுகளில் கன்னிமார் வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, வழிபாட்டுக்கான காரணங்கள் உள்பட ஆற்றின் வரலாறு தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி, 1/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818