வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம், சிவம், ஸ்ரீ கமலா புக்ஸ்,பக்.320, விலை ரூ.160.
வீடு, கடை, அலுவலகம், தோட்டம், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்டவற்றை வாஸ்து சாஸ்திர முறைப்படி எவ்வாறு அமைக்கவேண்டும்; அதனால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல்.
“சொந்த வீடு யோகம் யாருக்கு அமையும்? வாஸ்து சாஸ்திரத்திற்கும், ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா? வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?’ என்றெல்லாம் வாஸ்து தொடர்பாக என்னென்ன வினாக்கள் எழுமோ, அவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இந்நூல் கேள்வி – பதில் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது.
“வீடுகட்டும் மனையில் வடகிழக்கின் முக்கியத்துவம் குறித்து வாஸ்து கூறுவது என்ன?’ என்ற கேள்விக்கு, “வடகிழக்கு வளம் தருவது, புனிதமானது, வடக்கிற்கு அதிபதியான குபேரனும், கிழக்கிற்கு அதிபதியான இந்திரனும் சேர்ந்துவிட்டால் ஏராளமான நன்மைகள் உண்டு என்கிறது இந்நூல்.
தெற்கு பார்த்த மனை அதிர்ஷ்டம் தருவது ஏன்? செயல்களில் ஈடுபடும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து செயல்பட நன்மைகள் உண்டு. கிழக்கு நோக்கி சமையல் செய்தால் நலம் பெருகும். வீட்டுமனையின் அளவுகள், வீட்டில் எந்தெந்தப் பகுதிகள் எங்கெங்கு அமைய வேண்டும் என்பதற்கெல்லாம் படங்கள் வரைந்து காட்டப்பட்டுள்ளன. வீட்டில் வாஸ்து கோளாறுகள் இருந்தாலும், அவை நீங்க பரிகாரம், மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் அறிய விரும்புவோருக்கு இந்நூல் சிறந்த கையேடாக விளங்கும்.
நன்றி: தினமணி, 1/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818