கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர், வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ.
தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை.
கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது.
அதை சுவையாகவும், புதுமையான நடையிலும் எழுதியுள்ளார் க.ஜெய்சங்கர். கண்ணதாசன் பற்றி இதுவரை வெளிவந்துள்ள சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.
நன்றி: தினத்தந்தி, 4/10/2017.