கவிதை ஒளி
கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ.
பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து.
நன்றி: தினத்தந்தி, 4/10/2017.